5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பொருளாதார ரீதியாக திரைத்துறை பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மாற்று வழியாக பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த நடிகர் சூர்யாவின ‘சூரரைப் போற்று’ படம் நேரடியாக அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்து படங்கள் ஓடிடியை நோக்கி செல்கின்றன. இதனால் சூர்யா மீது திரையுரிமையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதனிடையே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என்றும் படம் தியேட்டரில் தான் முதலில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது