நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த வழக்கத்தை கோலிவுட்டில் முதலில் துவங்கி வைத்தது சூர்யா தான். அவரின் தயாரிப்பில் உருவாகிருந்த ‘பொன்மகள் வந்தால்’ திரைப்படத்தை அமேசானில் வெளியிட்டிருந்தார். தற்போது அவரின் ‘சூரரைப் போற்று’ படமும் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகள் திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறியதை அடுத்து மேலும் பல திரைப்படங்கள் ஒடிடி பக்கம் சென்று வருகின்றன.

இந்த லிஸ்டில் விஷாலின் ‘சக்ரா’ படமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரூபாய் 45 கோடி விஷால் கேட்டதாகவும் ஆனால் அமேசான் நிறுவனம் ரூபாய் 33 கோடி வரை மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.