Tuesday, August 25, 2020

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் இணையும் யோகிபாபு

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம் தான் ‘அந்தாதூன்’. இதன் தமிழ் ரீமேக்கை டைரக்டர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.

90களின் கனவு நாயகன் பிரஷாந்தை லீடாக வைத்து ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் தபு கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனும், ராதிகா ஆப்தே ரோலுக்கு 2018ல் அழகிப் பட்டம் பெற்ற அணுகீர்த்திவாஸ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் தபுவின் கணவராக நடிகர் கார்த்திக் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது காமெடியில் கலக்கிவரும் யோகி பாபு இப்படத்தில் காமெடியனாக ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்...

No comments:

Post a Comment

Pages