கோலிவுட்டில் பிஸியான ஹீரோவாக இருந்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமான படம் சிரஞ்சிவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிருந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் ஒரு தெலுங்கு முக்கிய நடிகருடன் இணைய உள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வெளியாகிருந்த படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமாகும். பெரும் வெற்றியை பதிவு செய்த இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சித்து வரும் நிலையில் தெலுங்கில் இதன் ரீமேக்கிற்கான வேலையை துவங்கவுள்ளனர். இந்த ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதன் தமிழ் ரீமேக்கில் சிம்புவும் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாண் ஆர்வமாக இருப்பதாகவும், தன்னுடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.