ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தாங்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்வோம் என்ற தகவலையும் அளித்திருந்தது. இந்நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் மேல்முறையீடு செய்தால் தங்களது விளக்கத்தை கேட்கக்கோரி தமிழக அரசு மனுதாரர்கள் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான் இந்த ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவர்களே முன்னதாக கூறியிருந்தார்கள். தற்பொழுது உச்சநீதிமன்றத்தில்அந்த மேல்முறையீடு மனு தக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரான விஷயங்களையும், என்னென்ன விஷயங்களை எல்லாம் சுட்டிக்காட்டி ஆலை திறப்பதற்கு தடை விதித்தார்களோ அதற்கெல்லாம் எதிர் பதில் விஷயங்களைக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசாகட்டும் அதேபோல் இந்த ஆலை போராட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி வரும் அனைவருமே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இப்படியான முக்கிய வழக்குகளை நீதிமன்றம் நேரடியான வழக்கு விசாரணை தொடங்கியதற்கு பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தை பொருத்தவரை மிகவும் அவசரமான வழக்குகளை மட்டும் பட்டியலிட்டு நடத்தி வருகிறார்கள். இந்த விளக்கு ஒருவேளை முதற்கட்ட விசாரணைக்கு வந்தாலும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை நிர்வாகம் ஆனது அந்த சுற்றுப்புற பகுதி மக்களுக்கு என்ன மாதிரியான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு என்னென்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுத்து வருகிறது என்பதையும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த நிர்வாகம் இந்த மனுவில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்