ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். பல நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமாகி இருக்கிறார். டெல்லி ராணுவ மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக அவரது மகன் வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிலேயே ஒருவராக இருந்து மத்திய அரசிலே பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மிகவும் மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அவர் நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கவனித்திருக்கிறார். குடியரசுத் தலைவராக இருந்து அதனுடைய பதவி காலம் முடிந்த பிறகு டெல்லியில் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்திலே அவருக்கு மூளையில்‌ கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே பரிசோதனைகள் நடந்தபோது அவருக்கு கொரோனா தொற்றும் இருப்பது தெரியவந்தது.

மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டாலும் கொரோனாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் பிரணப் முகர்ஜி. கோமாவிலேயே இருந்தபோது அவருக்கு ராணுவ மருத்துவமனையிலேயே வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் நினைவின்றி கோமாவிலையே பிரணாப் முகர்ஜி மரணமடைந்த இருக்கிறார் என்ற செய்தியை அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்டிருக்கிறார்.