எஸ்ஆர்எம் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெலி மெடிசன் வசதியை நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தொடங்கிவைத்தார். தொலைதூரத்திலிருந்து மருத்துவ வசதி அளிக்கும் வகையில் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெலி மெடிசன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இந்தச் சேவையை தொடங்கி வைத்தார். பாரிவேந்தர் தொலைதூர மருத்துவ சேவை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியின் கீழ் வெளிநாட்டு மருத்துவர்களின் சேவையையும் நோயாளிகள் பெறலாம். மேலும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைவேந்தர் சத்யநாராயணன் மனநலம் சார்ந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் வேளாண் படிப்புகளுக்காக பிரத்தியேக வளாகத்தையும் பாரிவேந்தர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாரிவேந்தரின் மனைவி ஈஸ்வரியும் கலந்து கொண்டார்.