நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்பட கூடிய சூழ்நிலைகளில் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட மால்கள் இருக்கின்றது. மால்கள் உள்ளே செல்லும் முன் நுழைவுவாயிலில் க்யூ ஆர் கோடு மூலமாக டவுன்லோட் செய்யும் ஒன்று வைத்திருக்கிறார்கள். அந்த ஆப் உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் அங்க பின் வழியாக உள்ளே செல்லும் நபர்கள் தனித்தனியே சமூக இடைவெளி யோடு இருக்கின்றார்களா இல்லை குழுவாக பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளார்களா என்பதை கண்காணிக்க அந்த மிகவும் எளிமையானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நுழைவாயிலில் மால்களுக்கு உள்ளே சென்றவுடன் எவை எவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற விளம்பரப் படங்கள் கொண்ட அறிவிப்பு பலகையும் உள்ளது. மால்களுக்குள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே சென்றால் அந்த ஆப் கண்காணித்து விடும் . உங்களை வாயிலேயே ஒரு இடத்தில் நின்று அதற்குப் பிறகுதான் உள்ளே செல்ல வேண்டும் அந்த இடத்தில் நிற்கின்ற இடத்தில் சானிடைசர் கொண்டு கால்கள் சுத்தம் செய்யப்படும்.

அதை தாண்டி உள்ளே செல்லும் பொழுது யு.இ எனும் தொழில்நுட்பம் கொண்ட உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய கருவி ஒன்று உள்ளது.

அதை தாண்டும் பொழுது மனித உடலில் எவ்வளவு வெப்பநிலை உள்ளது என்பது தெளிவாகிவிடும். அதிக வெப்பநிலை உடலில் இருந்தால் அவர்களே அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்படும் வசதி உள்ளது. அதேபோல் கழிப்பிட வசதிகளும் அங்கு விற்கப்படும் நிலையில் உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் அந்த அளவிற்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி முறையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.