‘சூரரை போற்று’ படத்தின் ஓடிடி ரிலீஸ் காரணமாக சூர்யாவுக்கு கடும் எதிர்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சூர்யாவின் தரப்பில் இருந்து இவைகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை இதனிடையே இயக்குனர் ஹரி சூர்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சூர்யாவை வைத்து ஆறு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி. இவர்கள் இருவரும் ஏழாவது முறையாக இணையவிருந்த படம் தான் ‘அருவா’, இந்த தற்போது ட்ராப்பாகி உள்ளது. இதனிடையே இயக்குனர் ஹரி சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்து மீண்டும் ஆலோசிக்கும் படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,

“உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் கூற விரும்புகிறேன். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி, ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம். சினிமா என்னும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்குமான அங்கீகாரம், தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.