தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. அவ்வப்போது பல தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதம் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங் களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் இ பாஸ் முறையானது ரத்து என அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில், மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் பயணச்சீட்டு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் ஆட்டோ ஜெனரேட்டர் முறையில் அனுமதி என்பது உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டிற்கு பத்தாயிரத்திற்கும் கம்மியாக வருமான ஈட்டும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளன. நிலையான நடைமுறை அறிக்கை தமிழக அரசால் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.