தெலுங்கு திரையுலகில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் தான் ‘ஆச்சார்யா’.

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து சிரஞ்சீவி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆச்சார்யா’ படத்தை பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென படத்தில் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து த்ரிஷா விலகினார்.

இதனால் த்ரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ராஜேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை படத்தை தயாரிக்கும் மேட்னி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் அறீக்கையும் வெளியிட்டுள்ளனர்.