‘பிகில்’ படத்தை தொடர்ந்து அட்லி தனது அடுத்த படத்திற்கான ஆரப்பக்கட்ட வேலைகளை கவணித்து வருகிறார். இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவரின் படங்களிலும் ஷங்கரின் சாயல் பிரம்மாண்டம் எனும் வடிவில் இருக்க தான் செய்கிறது.

படத்திற்கு ஆரம்பத்தில் சொல்லும் பட்ஜெட் ஒன்றாகவும் பின்னர் வேலைகளில் அதிக செலவை ஈர்த்துவிட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய செய்வார். ஆனால், படத்தின் ரிலீஸுக்கு பிறகு தயாரிப்பாளரின் முதலுக்கு மோசம் வராமல் பார்த்துக்கொள்வதிலும் கெட்டிக்காரர். அவர் படங்கள் ஹிட் ஆவதாலும் விஜய் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாலும் அவரது சம்பளம் பல கோடிகளில் ஏறியுள்ளது.

இந்நிலையில் விஜய்யுடன் அவர் இணைந்த முதல் படத்தின் போது தயாரிப்பாளருக்கு அவர் அளித்த அதிர்ச்சி வைத்தியம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. முதலில் ‘தெறி’ படத்தினை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க இருந்த நிலையில் அதைக் கலைப்புலி தாணு கைப்பற்றிருக்கிறார். அப்போது முன்னதாக செலவு செய்த தயாரிப்பாளருக்கு பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என கூறி 95 லட்ச ரூபாய் வரை கேட்டு வாங்கியுள்ளாராம். இந்த தொகையைக் கேட்ட தாணுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு அன்று முதல் படத்தின் பட்ஜெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததாகவும் சொல்லப்படுகிறது.