கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவந்த துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படம் முடிந்தப்பாடில்லை. இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பற்றிய முக்கிய அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். துருவ நட்சத்திரம் படம் ரிலீஸாகவேண்டுமென்றால் இன்னும் 6 நாட்கள் விக்ரமை வைத்து ஷூட் செய்ய வேண்டுமாம். ஆனால், கௌதம் மீது கடும் கோபத்தில் இருக்கும் விக்ரம் ஒரு நாள் கூட படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் விக்ரம் இல்லாமலேயே மீதம் உள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்துவிட்டாராம் கௌதம் மேனன்.

படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் இந்த மூன்று ஆண்டுகளாக படத்தை தாங்கி வந்துள்ளது. எனினும், இது ‘எனை நோக்கி பாயும் தோட்ட’ படத்தை போன்ற நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்காமல் இருந்தால் நல்லது.