போக்குவரத்து இடையூறு மற்றும் மக்கள் கூட்டமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை கண்டுபிடித்து மேலூர் இரட்டை சகோதரர்கள் அசத்தி இருக்கிறார்கள். பாலச்சந்தர் மற்றும் பாலகுமார் என்ற இரட்டையர்கள் தற்போது மேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர் .

இவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் போக்குவரத்து இடையூறு உள்ள பகுதிகளில் விரைந்து செல்வதற்கும் இதுபோன்ற அவசர கால வாகனங்கள் வருவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ் கருவியுடன் இணைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் இரண்டு கிலோமீட்டர் முன்பு புறப்படும் போது அதிலுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுந்தகவல் வந்துவிடும். இதுபற்றி அவர் கூறியதாவது: டிராபிக் சிக்னலை தவிர்த்து எங்கங்க டிராபிக் ஆகுதோ அனைத்து இடங்களிலும் இந்த சிக்னல் போட்டுட்டிருந்தோம். இந்த ஆம்புலன்ஸ் இரண்டு கிலோமீட்டர் முன்னாடி வரும்போதே முன்கூட்டியே கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு குறுந்தகவல் வந்துவிடும். அது ஜிபிஎஸ் உடன் கனெக்டில் இருக்கும்.

எந்த அளவு என்று துல்லியமாக காட்டும். இதன் மூலம் எளிதில் ஆம்புலன்ஸ் போக்குவரத்து இடையூறு உள்ள இடங்களை தவிர்க்கலாம் அல்லது மாற்றுப் பாதையில் செல்லலாம் பொதுமக்கள் வழிவிட்டு விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.