பலரும் அழகால் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்களே. இந்நிலையில், யோகி பாபு உருவத்தை வைத்து பலரும் கேலிக்கூத்தாக இவரை நகைத்தனர். இவரது விடாமுயற்சியாலும், இவரை நகைத்த உருவத்தை முன்னோடியாகக் கொண்டு இவர் சினிமா துறையில் முன்னேறினார். யோகி பாபு என்றவுடன் அவரது உருவம் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இவர் நடிக்காத படங்களுக்கு இவரது புகைப்படத்தை ஒட்டி இவர் நடித்துள்ளார் என சித்தரித்து வருகிறார்கள். இவர் வாய்ப்புக் கேட்டு சென்றபோது சில சிறு வேடங்களில் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து இவர் நடிப்பது என வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு யோகி பாபு அவர்கள் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்