பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் ஃபேமஸான டீவி ஷோவாக உள்ளது. இதில் கலந்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால் கோலிவுட்டில் பட வாய்ப்பும் எளிதாக கிடைத்து விடுகிறது.

கடந்து பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துக் கொண்ட மலேசியாவை சேர்ந்த முகின் ராவ். அந்த சீசனின் வெற்றியாளர் ஆவார். நன்றாக பாட்டுப்பாடும் திரன் கொண்ட இவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருக்கிறார்.

இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான ஷிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.