உலகையே அச்சுறுத்தி வரும் நாடுகளில் வட கொரியா ஒன்றாகும். மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்தால் அதற்கு காரணம் இந்த நாடாகவே இருக்கும் என கூறுகின்றனர். அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து என்னை மீட்டுக் கொண்ட இந்த நாடானது கிம் ஜாங் உன் என்னும் சர்வாதிகாரியின் கையில் உள்ளது. வட கொரியாவை ஆண்டுவரும் கிம் ஜாங் உங்கின் உடலானது மோசமான நிலையில் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சுயநினைவை இழந்ததாகவும் கோமா நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது வட கொரியாவில் ஆட்சி மாற்றம் நிறைவேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. கிம் ஜாங் உங்கின் சகோதரியான கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிபராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை இவர் வட கொரிய அதிபரானால் இவரே அந்நாட்டின் முதல் பெண் சர்வாதிகாராவார். கடந்த வாரத்தில் ' கிம் யோ ஜாங்' அவர்களுக்கு வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் கூடுதல் பொறுப்பானது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.