கல்லூரி மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கவே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் துறைமுகத்தில் பணி கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அரசு உதவி செய்து வருவதாகவும் கடலூர் துறைமுகத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முன்னதாக பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் 25 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 32 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இ பாஸ் நடைமுறையின் அவசியம் குறித்து விளக்கினார். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது: இ பாஸ் யார் விண்ணப்பித்தாலும் கொடுக்கிறோம். அதுல இன்னும் தளர்வுகள் கொண்டுவரப்பட இருக்கின்றன.

இ பாஸ் எல்லாருக்கும் கொடுத்தால்தான் எங்கேயாவது பாதிப்பு நடந்த எளிதாக கண்டுபிடிக்க முடியும். இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இந்த நோய் எப்போ முழுவதுமாக குறையும் குணமடையும் அப்படின்னு யாருக்கும் தெரியாது அதனால மக்கள் பொறுப்புணர்வோடு இ பாஸ் முறையை பயன்படுத்துங்க என்றும் அவர் கூறினார். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது, எல்லோரும் பணம் கட்டி எப்போ எக்ஸாம் வரும்னு எதிர் பார்த்திட்டு இருக்காங்க, தள்ளித்தள்ளி போயிட்டு இருக்குது அதற்கு தீர்வு கான்பதற்காகதான் இந்த அறிவிப்பு" இவ்வாறு அவர் கூறினார்.