கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருட்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலமாக கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடியை தாண்டும் வேண்டும் காவல்துறை தெரிவித்திருக்கின்றனர்.

பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி ஏற்ற பிறகு செய்தியாளர் கூட்டத்திற்கு அறிவிப்பு விட்டிருந்தார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் தான் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கனரக லாரி மற்றும் டேங்கர் லாரி கஞ்சாவை மூட்டை மூட்டையாக கடத்தி பெங்களூருவில் உள்ள தேவநக அல்லி பகுதியில் வைத்து அங்கிருந்து பிரித்து கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளனர். தேவனாகல்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கஞ்சா மற்றும் போதை பொருளை பிரித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமும் சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதமாக ஊரடங்கு காலகட்டத்திலும் கூட இவர்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்துள்ளது.

இஸ்மாயில் என்ற நபரின் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் அஞ்சல் மூலமாக ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருட்கள் கர்நாடகா வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்களை கன்னடத் திரையுலகிரான இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகைகள் போன்ற அனைவருக்கும் சப்ளை செய்தது கைது செய்தவர்களின் வாக்குமூலம் மூலமாக தெரிய வந்துள்ளது.