‘கைதி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள படம் ‘மாஸ்டர்’. தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

பட வேலைகள் முடிந்தும் கொரோனா காரணத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

2021 ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பை துவங்கி 2021 தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய் தனது 66வது படத்திற்காக மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கான ஷூட்டிங்கை 2021 இறுதியில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளனராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.