காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். சற்றுமுன் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் காணொளி மூலமாக தொடங்கியது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் சோனியா காந்தி சென்ற வருடத்திலிருந்து இடைக்கால தலைவராக இருந்தை நினைவூட்டி தொடர்ந்து அந்தப் பதவியில் தான் இருப்பது சரியாக இருக்காது என்றும், கட்சி ஒரு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் உடனடியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியா காந்தி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தலைவராக தொடர வேண்டும். தன்னுடைய பொறுப்பை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தின் தொடக்கத்திலேயே முக்கிய ஆலோசனை வழங்கி இருக்கிறது . கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆலோசனைகளிலேயே சோனியாகாந்தி கட்சியின் தலைவராக நீடிக்க விரும்பாவிட்டால் யாரை கட்சியின் தலைவராக கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வரவேண்டும் என்று ஒரு சாரார்கள் கூறுகிறார்கள் . காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று இன்னொரு சாரார்கள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சோனியா காந்தியே தொடர வேண்டும் என்ற வலியுறுத்தல் இருக்கிறது. பல்வேறு முக்கிய நிகழ்வுகள் முடிவுகள் எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிகிறது.