கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர்.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, அவரின் முந்தைய ‘சூர்ப்பனகை’ பட தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக பட வேலையை தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்ததால் முழு படப்பிடிப்பையும் அங்கு சத்தமில்லாமல் முடித்துவிட்டனர். தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.
Tuesday, August 25, 2020
Home
Cinema
Raisa Wilson as the heroine in the thriller story
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்!
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்!
Tags
Cinema#
Raisa Wilson as the heroine in the thriller story#
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்#
Share This
About Expat guru
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்
Tags
Cinema,
Raisa Wilson as the heroine in the thriller story,
த்ரில்லர் கதையில் நாயகியாக ரைசா வில்சன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment