டோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு உலக அளவில் தனது மார்க்கெட்டை விரிவு படுத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாக் அஷ்வின் இயக்கும் இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது.

படத்தில் பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடிக்கவுள்ளார். ராமர் வில்வித்தையில் சிறந்தவர் என்பதால், படத்தில் அதை கச்சிதமாக செய்ய வேண்டும் என்பதற்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சி மேற்கொள்ள இருக்கிறாராம். தற்போது கொரானோ அச்சுறுத்தல் இருப்பதால் வீட்டிலேயே வில்வித்தை பயிற்சி எடுக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக வீட்டிலேயே தனி பயிற்சிக்கூடம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். அவை முடிந்ததும் பிரபாஸ் வில்வித்தை பயிற்சிகளை ஆரம்பிக்க இருக்கிறாராம்.