மத்திய அரசானது வெளியூர் மற்றும் வெளி மாநில பயணங்களுக்கு தகுந்த காரணத்துடன் கூடிய விதிமுறைகளின் கீழ் இ பாஸானது நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்தது. இதை மீறி இ பாஸ் முறைகளில் தளர்வு ஏற்பட்டால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிரானது என்றும் கூறுகின்றது. இந்நிலையில் இன்று காலை இ பாஸ் என்ற இணையதளத்தின் வாயிலாக உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தது. அது புதுச்சேரியில் இ பாஸ் ரத்து என்ற ஒன்று.

புதுச்சேரியை பொருத்தவரை கருணாவின் தாக்கம் என்பது சற்று அதிகமாக காணப்படுகிறது. இன்று மட்டும் 412 பேருக்கு தோற்று உறுதி ஆகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு புதுச்சேரியில் பொது நடக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கூறிவருகின்றனர். செவ்வாய்க்கிழமை தோறும் புதுச்சேரி அரசானது பொது முடக்கம் அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இ பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.இதனால் புதுச்சேரியில் இருந்து வெளியே செல்வதற்கும் வெளியிலிருந்து புதுச்சேரிக்கு வருவதற்கும் தடையானது நீங்க இருக்கிறது. இது கவலைக்குரிய நிலைமை ஆகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வாகனங்கள் அதிகளவில் புதுச்சேரிக்கு வருவதால் தொற்று அதிகமாக பரவும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில்அவசர பேரிடர் மேலாண்மை கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.