தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி தற்போது நடித்து வரும் ‘சுல்தான்’ படத்தின் வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு கோலிவுட்டில் மிகவும் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சில தகவல்கள் கூறியுள்ளார்.

“சுல்தான் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் பணிகள் முடிந்துவிட்டது. பெரும்பான்மையான எடிட்டிங் வேலைகளும் முடிந்தன. மீதமிருக்கும் வேலைகளையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கம்பனி தயாரிப்பில் மிகப்பெரிய படமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் இருக்கும். இன்னும் ரிலீஸ் குறித்து எந்த திட்டமும் செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.