இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு படமான இதை நிறைய தடைகளுக்கு பிறகு தற்போது உருவாக்கி வருகிறார்.இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரங்கு மணிரத்னத்தின் கனவிற்கு மீண்டும் தடையாகியது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்த முடியால் கவலைப்பட்டு வந்த மணிரத்னத்திற்கு கலை இயக்குனர் ஒருவர் ஆலோசனை கூற சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்தது. ஆனால் திடீரென பொன்னியின் செல்வன் படத்திற்கான வேலைகளை நிறுத்தும் படி தனது குழுவினர்களுக்கு மணிரத்னம் உத்தரவிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாததால் படம் மீண்டும் ட்ராப்பாகிவிட்டதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை ட்ராப் செய்யும் வாய்ப்பே இல்லை என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா மற்றும் ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது...