நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோ.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கனை நிறுவிய ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘சூரரைப் போற்று’ எடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடகள் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இந்த ப்ரீமியர் டிஜிட்டல் தளத்தில் புது சாதனையை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது...