கோலிவுட்டில் வாரிசு நடிகர்களின் வருகை முன்பை விட அதிகரித்துள்ளது. சினிமாவில் ஓப்பனிங் எப்போதும் உண்டு அதை சரியாக பயன்படுத்தி கொள்ளும் கலைஞர்கள் தான் இங்கு குறைவு, அதிலும் குறிப்பாக வாரிசு நடிகர்கள் சில படங்களிலே காணாமல் போய்விடுகின்றனர். அதற்கு காரணம் ஆரம்பத்தில் பட வாய்ப்பு வருகிறது என்று சரியான கதையை தேர்ந்தெடுக்க தவறி விடுகின்றனர்.

இந்த தவறில் இருந்து மீண்டு வரும் கலைஞர்கள் நிச்சயம் வெற்றிப் பெருகின்றனர், அப்படியான கலைஞனாக நிச்சயம் இடம் பிடிப்பார் என்று பெரிதும் நம்பப்படும் வாரிசு நடிகர் துருவ் விக்ரம். ‘ஆதித்ய வர்மா’ படத்தை தொடர்ந்து இவர் யாரின் படத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் நடிப்பின் மீது கவணம் செலுத்தாமல் படிப்பை தொடர்ந்தார். தற்போது இவர் நல்ல கதைக்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் சினிமா மீது பிடிப்பில்லாமல் இருந்த இவரை விக்ரம் சமாதானப்படுத்தி தான் பாலாவின் இயக்கத்தில் நடிக்க வைத்தார், அந்த ‘வர்மா’ படம் வெளியாகாமல் ஸ்க்ராப் செய்யப்பட்டது. இதனால் சினிமாவை வெறுத்த இவர் ‘ஆதியா வர்மா’ படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவெடுத்து நல்ல கதைக்காக காத்திருக்கிறார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.