அமெரிக்க குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் தலைவர் 'ஜோ பிடன்' நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஆவார். அவர் பேசுகையில் தற்போது ஆண்டு வரும் குடியரசுத் தலைவரால் நம் நாடு இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், நம்மிடையே மிகுந்த பயமும் கோபமும் பிரிவினையும் ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க மக்களிடம் நீங்கள் என்னுடைய ஆட்சியை நம்பினால் நான் இந்த சூழ்நிலையில் இருந்து நம் நாட்டை நிச்சயம் மீட்டு எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

அவருடைய பேச்சு முழுவதிலும் தற்போது ஆண்டுதோறும் குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரை முற்றிலும் பயன்படுத்தவில்லை. மாறாக அவருடைய கொள்கைகளையும் செயல்களையும் பற்றிய விமர்சனத்தை மட்டுமே முன்வைத்துள்ளார். ஜனநாயக கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னைத் தானே ஜோ பிடன் அவர்கள் முன் நிறுத்தியுள்ளார். தான் அமெரிக்காவை பெருந்தன்மையும், பலமும், தாழ்மையும் மற்றும் சுயநலம் அற்ற நாடாக பார்ப்பதாக கூறினார். நான் நிச்சயமாக அமெரிக்க மக்களுடைய மனதே வெல்வேன். வரப்போகும் இந்த வெற்றியானது சுயநலத்திற்காக அல்ல. மாறாக பொது நலமாய் வாழ்பவர்களுக்காக. மேலும், இந்த வெற்றியானது உயர்ந்தோர்க்கு உகந்தது அல்ல. இந்த நாட்டை உயர்த்த நினைக்கும் உழைப்பாளர்களுக்காக. மேலும் இந்த வெற்றி ஆனது கழுத்தின் மீது கால் வைத்து அநீதி ஏற்படுத்தியவர்களை அழிப்பதற்காக என்று குறிப்பிட்டார்.

அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் வாய்ப்பைக் குறைக்கும் அமெரிக்காவை மட்டுமே அறிந்த அனைத்து இளைஞர்களுக்கும் இந்த வெற்றியானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். வெளியுறவு கொள்கை குறித்து ஜோ பிடன் பேசுகையில், நான் சுற்றியுள்ள நாடுகளுடன் நல்ல உறவை மேம்படுத்துவேன் மற்றும் தற்போது அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சர்வாதிகாரம் முற்றிலும் கலைக்கப்பட்டது என்பதை சுற்றியுள்ள நாடுகளுக்கு தெளிவுபடுத்துவேன் என்று கூறினார். நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் தேர்தலானது, அமெரிக்க மக்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய சீரழிவால் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் மாண்டனர் என்றும் தன்னுடைய அனுதாபத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் 50 மில்லியனுக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்தனர் என்று குறிப்பிட்டார். அவர் ஊதிய உயர்வு பற்றியும், பெண்களுக்கான சம ஊதியம் முதலான திட்டங்களை குறித்து தெரிவித்தார். மேலும் தன்னுடைய கட்சியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் என்னும் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட சியாமளா என்பவருடைய மகளை வாழ்த்தினார். கமலா அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு மிகவும் உழைத்தார் என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இவரின் ஆட்சி அமெரிக்காவில் நிலைக்கபட்டால் கறுப்பின மக்களுக்கான சம உரிமையை பெற்றுத்தர தானும், தனது துணை குடியரசுத் தலைவர் கமலா ஹரிஷும் போராடுவோம் என உறுதியளித்து தன் உரையை முடித்தார்.