Monday, August 24, 2020

யுவனின் இசையில் மெருகேறும் இளையராஜாவின் ஹிட் பாடல்...

பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம' என்ற பாடல்.

இப்போதும் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை 'டிக்கிலோனா' படத்திலும் எதிர்ப்பார்க்கலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகி பாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ் - முனீஸ்காந்த் - 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளது. இதனால் படத்தின் வெற்றி நிச்சயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Pages