இனி பேட்மென் கேரக்டரில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய நடிகர் பென் அஃப்லெக், மீண்டும் பேட்மெனாக நடிக்க உள்ளார்.

டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தான் Flash. மின்னல் வேகத்தில் செயல்படுவது தான் இந்த கேரக்டரின் சூப்பர் பவர். மார்வெல்லில் ஸ்பைடர் மேன் போல் டிசிக்கு இந்த Flash தான் இளம் சூப்பர் ஹீரோ. இதுவரையில் ‘batman v Superman’ , ‘Suicide Squad’, ‘Justice League' ஆகிய படங்களில் வந்த இந்த கேரக்டருக்கு முதல் சோலோ மூவி தற்போது உருவாகிறது. இந்த படத்தின் கதைகளம் டிசியின் டைம் லைனில் 2011ல் இருந்து ஃப்ளாஷின் பாண்ட் ஆஃப் வியூல் இருந்து சொல்ல திட்டமிட்டுள்ளனர். ‘The Flash’ என்று டைட்டில் வைக்கப்பட்டுருக்கும் இந்த படத்தை வார்னர் ப்ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Seth Grahame-Smith இயக்கத்தில் 2018ல் உருவாகவிருந்த இந்த படம் டிசியின் குழப்பமான டைம்லைன் காரணமாக தள்ளிச்சென்றது. Ezra Miller லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேமியோ ரோலில் பேட்மெனாக பென் அஃப்லெக் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசி ரசிகர்களுக்கு பேட்மெனாக பரிட்சியமான பென் அஃப்லெக் திடீர் என்ற பேட்மேன் கேரக்டரில் இருந்து விலகுவதாக அறிவித்தார், இதனால் தி பேட்மென் படத்திற்கு ராபர்ட் பேட்டின்சனை கமிட் செய்துள்ளனர். தற்போது ஃப்ளாஷ் படம் 2011ல் இருந்து கதையை சொல்ல விருப்பதால் பென் அஃப்லெக் நடித்தால் மட்டுமே கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரை அனுகிய படக்குழுவிற்கு சில நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்துள்ளாராம் பென். இந்த படத்தை 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.