காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலங்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருப்பதை அடுத்து வேளாண் தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள தஞ்சை, திருவாரூர் ,நாகை புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறு மாதங்களுக்கு முன்பு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தார். அது அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது என்று குற்றம் சாட்டி இந்த நிலையில் சிறப்பு வேளாண் மண்டங்கலுக்கான அரசாணையை தமிழக முதல்வர் வெளியிட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மிகவும் செயல்பட்டு வருகிறது ஆரம்பகட்ட மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என்றும் இதன் பலன் என்னவென்றால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வேளாண்மைக்கு மட்டுமே மற்ற அனைத்தும் அதற்குப் பிறகுதான் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைந்த விவசாயம் குறு விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேர்ந்த சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.