ஆர்யாவின் தம்பி அறிமுகமான ‘அமர காவியம்’ படத்தின் மூலம் தமிழுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ரெட் ஒயின்ஸ், மிஸ்டர் பிராடு, மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ் ஆகிய படங்களில் நடித்து கேரள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 28 வயதாகும் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த அவரின் குடும்பத்தினர், அஸ்வின் பிலிப் என்வரோடு இவருக்கு திருமண நிச்சயத்தை செய்து முடித்துள்ளனர்.

கோட்டயம் செயிண்ட் தாமஸ் சர்ச்சில் நடைபெற்ற இவர்களது நிச்சயத்தை தொடர்ந்து செப்டம்பர் மாதம் திருமணத்தை நடத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். மியாவிற்கு கோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இதனால் இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பாரா மாட்டாரா என்கிற கவலை ரசிகர்கலை சூழ்ந்துள்ளது.