நெல்லையில் 2 திருநங்கைகள் உட்பட மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நெல்லை மாநகரத்தில் 2 திருநங்கைகள் உட்பட முருகன் என்ற ஒரு நபரும் படுகொலை செய்யப்பட்டனர். பவானி, அனுஷா, முருகன் ஆகிய மூவரும் நெல்லை மாநகரத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்டெடுக்க பட்டனர்.

இது சம்பந்தமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷ் என்ற தங்கவேல், சுலைமான், செல்லத்துரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து செய்துள்ளனர். ஷரினா, ரேணுகா, தாரணியை ரயில் செய்யக்கோரி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முன்பே போராட்டம் நடைபெறுகிறது. சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராடி வருகின்றனர்.

தங்கவேலு என்ற நபர்திரு நம்பியாக வாழ்வதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானி என்ற பெண்ணாக வாழ்ந்து வந்ததாகவும், நான் தற்போது ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய் என்றும் எனவே இதனை கண்டித்தும் தான் சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.