சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஐந்து பேருக்கு கொரோனாதொற்று இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் அணி உதவியாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொரோனா உறுதி என நிர்வாகம் தகவலை வெளியிட்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அணி உதவியாளர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு தொற்று உறுதி என அணியின் நிர்வாகம் தகவலை தெரிவித்து இருக்கிறது.

சிஎஸ்கே அணியினருக்கு கொரோனா உறுதியாகி இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. ஐபிஎல் போட்டியை விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமீரகம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கான தனிமைப்படுத்தலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஐபிஎல் குழுவானது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கான தனிமைப்படுத்தலை ஒருவாரம் நீடித்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகக்குழு. இதுபற்றி கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறியதாவது: ஒரு சிலருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதனால் ஐபிஎல் தடை விதிப்பது மிகக் குறைவு.

இன்னும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இருபது நாட்களுக்கும் மேலாக உள்ளது செப்டம்பர் 19 ஆம் தேதி . அணி உதவியாளர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக தொற்று பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நடைபெறுவது சற்று கடினமாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு. என்று அவர் தெரிவித்துள்ளார்.