கன்னட சினிமாவில் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் தான் தென்னிந்திய அளவில் கவணமீர்க்கும், அப்படியான ஒரு படம் ‘காவலுதாரி’. நிறைய திருப்பங்களோடு சேர்ந்த த்ரில்லர் படமாக வெளியான இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் தற்போது தமிழிலும் ரீமேக்காகி வருகிறது.

சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இதில் சத்யராஜும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சத்யா’ இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது கடந்த மார்ச் மாதம் ரிலீஸுக்கு தயாரான இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது படக்குழு மீண்டும் உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் படத்துக்கான மோஷன் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சுமந்த் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தையும் பிரதீப் தான் இயக்கிவருகிறார். நாசர், கிஷோர், நந்திதா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். பாஃப்டா நிறுவனம் சார்பாக தனஞ்செயன் இவ்விரு படங்களையும் தயாரிக்கிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...