கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகவும் பிஸியான நாயகியாக இருந்து வருகிறார் டாப்ஸி. தன்னுடைய கேரக்டருக்கு முக்கியதுவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது இது குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். நான் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம், எனக் டாப்ஸி கூறியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர டாப்ஸி கைவசம் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்கள் உள்ளது. இது மட்டுமின்றி ராஜஸ்தானை தடகள வீராங்கனை ஒரிவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவும் டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.