கோலிவுட்டில் ஆக்டர் டைரக்டர் என பிஸியாக இருந்து வருபவர் பார்த்திபன். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் நடிப்பது குறித்து பார்த்திபன் கருத்து.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வெளியாகிருந்த படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமாகும். பெரும் வெற்றியை பதிவு செய்த இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சித்து வரும் நிலையில் தெலுங்கில் இதன் ரீமேக்கிற்கான வேலையை துவங்கவுள்ளனர். இந்த ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதன் தமிழ் ரீமேக்கில் கார்த்தியும் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனைத் தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே.." என்று கூறி பரவி வந்த இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.