டோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் சமந்தாவின் கணவருமான இவருக்கு தென்னிந்திய முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் அலை படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் விக்ரம் குமார். அந்த படத்தை தொடர்ந்து இவர் மாதவனை லீடாக வைத்து இயக்கிய ஹாரர் படமான ‘யாவரும் நலம்’ இவருக்கு கோலிவுட்டில் நல்ல அடையாளத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவணம் செலுத்தி வந்த இவர் சூர்யாவை வைத்து தமிழில் ‘24’ படத்தை இயக்கி மீண்டும் கோலிவுட்டில் தனது படைப்பின் மூலம் அறிமுகம் கொடுத்தார். இவர் தற்போது நாக சைதான்யாவை லீடாக வைத்து ‘தேங்யூ’ எனும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் யார் யார் உடன் நடிக்க உள்ளனர் என்பது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்த படத்திற்கான ஷூட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.