மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளில் கொசுவும் ஒன்றாகும். இது எளிதாக பல்கிப் பெருகும் தன்மை உடையது. கொசுவால் மனிதர்களுக்கு சிக்கன் குனியா, மலேரியா, தெங்கு முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிதாக மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றம் ஆனது ஆண் கொசுக்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட 75 கோடி கொசுக்கள் ஆனது பறக்கவிட தயார் நிலையில் உள்ளது. இதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா என்னும் பெரும் கொல்லி நோய் பரவி வரும் இந்நேரத்தில், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது சரியா? என அமெரிக்க மக்களிடையே பேசும் பொருளாக இது மாறியுள்ளது. இதற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் கூடும். இதனால் பெண் கொசுக்கள் முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் பெண் கொசுக்கள் பறக்கும் நிலையை அடைவதற்கு முன் இறந்துவிடும் . இதன் மூலம் ஏற்படும் நன்மை என்னவென்றால்? இயல்பாக ஆண் கொசுக்கள் மனிதனை தீண்டாது. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனை தீண்டு.ம் இதன் விளைவாக பல நோய்கள் பரவுவதற்கு பெண் கொசுக்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் நோக்கத்துடன் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் ஆனது உயிரோடு இருப்பதினால் பல்கிப்பெருகி பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும். இதனால், பெண் கொசுக்களால் பரவும் நோய்கள் ஆனது குறையும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், அதே சமயத்தில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது