கடவுளின் தேசம் என்று அழைக்கபடும் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு துயர நிகழ்வு நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. அந்த நிகழ்வுகளும் பின்னால்களில் அங்கு திரைப்படமாகவும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து இணைகிறது கோழிக்கோடு விமான விபத்து.

10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேருடன் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதுகட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் படம் உருவாகவிருக்கிறது. மாயா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது...