கோலிவுட் முக்கிய நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ படத்திலும் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்திலும் நடித்துவருகிறார். இவ்விரு படங்களில் சூட்டிங் வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மூன்று இளம் இயக்குனர்களுக்கு சிவா வாய்ப்பளிக்க உள்ளார். இவர்களில் 2 பேர் அட்லியின் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும், அட்லியின் இரண்டு உதவி இயக்குனர்கள் தனித்தனியாக கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதால் அவர்களது இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த மூன்றில் ஒரு படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மற்ற இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இந்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.