ஏழாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு மற்றும் தளர்வு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் இணைகிறார்கள். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர் களிடமும் முதலமைச்சர் கருத்துக்களை கேட்க உள்ளார். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளின் கொரோனாவினுடைய பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது. எவ்வளவு பேர் குணமாகி உள்ளனர் மற்றும் மற்ற பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து முதல்வர் முழுவதுமாக கலந்தாலோசித்து வருகிறார். இதுவரை பொது போக்குவரத்திற்கு தடை நீடித்து வருகிறது. பொது போக்குவரத்திற்கான தளர்வு குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்பட உள்ளது. மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களுக்கும் பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பான ஒரு முக்கிய அனுமதித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தப்படியாக இந்த மாவட்டங்களுக்குள் இ பாஸ் நடைமுறை தற்போது உள்ளது இந்த நடைமுறை ரத்து ஆகவும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது. இன்று மாலை 3 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் உடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது. இரவு 7 மணி வரை இருந்த ஊரடங்கு தற்போது 9 மணி வரைக்கும் நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.