Wednesday, August 26, 2020

விஜய் போலவே ஓடிடி விஷயத்தில் உறுதியாக இருக்கும் மாதவன்: பரபரப்பு தகவல்



தியேட்டர்கள் மூடியுள்ளதால் பல திரைப்படங்கள் டிஜிட்டல் தளத்தை நோக்கி தங்களின் கவணத்தை திருப்பிவருகிறது. சில முன்னணி நடிகர்ளும் தங்களின் படங்களை ஓடிடியில் வெளியிட முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், நடிகர் விஜய் தனது ‘மாஸ்டர்’ படத்தை திரையில் மட்டுமே வெளியிட வேண்டும் என தீர்மானமாக உள்ளார். எனவே தியேட்டர் எப்பொழுது திறக்கின்றதோ அப்போதுதான் மாஸ்டர் வெளிவரும் என்று கூறப்படுகிறது. விஜய் போலவே ஓடிடி விஷயத்தில் மாதவனும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அவர் இயக்கி நடித்த ‘ராக்கெட்டரி’ என்ற படத்தை பல ஒடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு கேட்டும் அவர் இந்த படத்தை ஓடிடிக்கு தரமுடியாது என்றும் திரையரங்குகள் தான் ரிலீஸ் செய்வேன் என்று கூறியுள்ளார்.

கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பணத்திற்காக தான் தயாரித்து நடிக்கவில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார். எனவே கோடிக்கணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருந்த ஓடிடி நிறுவனங்கள் ‘ராக்கெட்டரி’ படம் கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages