‘பிகில்’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘மாஸ்டர்’. ஐந்து மாதங்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் படக்குழு தற்போது ஒரு தேதியை லாக் செய்துவிட்டதாக தகவல் பரவியுள்ளது.

‘மாஸ்டர்’ படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதி பட தெரிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படம் என்பதால் பண்டிகை நாட்களில் தான் வெளியாகும் என்பதால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும் தற்போது நிலவும் இந்த அசாத்திய சூழல் அதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

இந்நிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் பொங்கல் தினத்தை குறிவைத்துள்ளதால் இரு உச்ச நடிகர்கள் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ளுமோ எனும் கவலை திரையரங்க உரிமையாளர்களை சூழ்ந்துள்ளது...