மலையாள திரையுலகில் முக்கிய நடிகருக்கான இடத்தை பிடிக்க முயன்று வரும் நடிகர் தான் டொவினோ தாமஸ். இவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘மின்னல் முரளி’.

டொவினோ தாமஸ் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகிருக்கும் சூப்பர் ஹீரோ படம் ‘மின்னல் முரளி’. இப்படத்தின் டீஸர் திருவோன தினமான இன்று வெளியாகியுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

‘மின்னல் முரளி’ முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பாசில் ஜோசப். உயர்தரமிக்க நடிகர் குழுவான குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.