ஏ.ஆர். ரஹ்மான் தனது இசையை ஹாலிவுட்டுக்கு கொண்டு சேர்த்து அங்கிருந்து ஆஸ்காரையும் வாங்கி வந்தார், தற்போது ஆல்பம் பாடலின் மூலம் ஹாலிவுட்டுக்கு தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார் ஜீ.வி.பிரகாஷ் குமார்.

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.

‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடலை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.