தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிருக்கும் இந்த படத்தில் விஜய்யின் எண்ட்ரி மற்ற படங்களை விட மாஸாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

விஜய் காலேஜ் ப்ரோபசராக நடித்திருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’. இதில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு இப்போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு படத்திலும் ரசிகனை அதிகம் கொண்டாட வைக்கும் காட்சி ஹீரோ எண்ட்ரி தான், அதை லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்கள் என்றும் மறக்க முடியாத காட்சியாக கொடுத்துள்ளாராம். காலேஜ் ரீ யூனியனில் தனது கல்லூரி நண்பர்களை சந்திக்கும் போது ‘வாத்தி கம்மிங்’ பாடலோடு தான் விஜய்யின் எண்ட்ரி இருக்கும் என்கிற தகவலை படத்தில் நடித்துள்ள நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார்.

தியேட்டரில் விஜய் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இந்த எண்ட்ரியை ரசிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ப்ரேம், ரம்யா, கௌரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.