இந்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சிறிய தொற்று என்று அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 13ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 14 ஆம் தேதி அவரை சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சிகிச்சை முறைகளைப் பற்றி மருத்துவமரிடம் கேட்டறிந்தார். 16ஆம் தேதி அவர் சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து 17ஆம் தேதி அவருடைய நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ குழுவினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி மகன் அவர்கள் தினமும் காணொளி வழியாக அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் தமிழ் சினிமா துறைகளிலும் அவருக்கு அவர் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய முன்வந்துள்ளனர். அவர் பாடிய ''நலமாக'' என்ற பாடல் மூலமாகவும் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.