பிக்பாஸ் சீசன் 3க்கு பிறகு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். சமீபத்தில் கூட கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் சூர்யாவை அவதூறாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிருந்தார்.

நடிகையும், மாடலுமான மீரா மிதுன் சக நடிகர்களை தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது கோபத்தை கொட்டித் தீர்த்தனர், கடந்த வாரம் முழுவதும் தீயாய் பரவிருந்த இந்த நிகழ்வு சற்று அமைதியடைந்த நிலையில் ரசிகர்களை மீண்டும் சீண்டியுள்ளார் மீரா மிதுன்.

மீண்டும் விஜய்யை வம்பிழுக்கும் விதமாக ஒரு டிவீட்டை போட்டுள்ளார். அதில் ‘ஒரு சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளன. நடிகர் ஒருவர் எந்த ஸ்டூடியோவில் இருந்து விக் வாங்குகிறார் என்பது பற்றி. விக்…. விக்கய்ய்ய்ய்’ எனக் கூறியுள்ளார். இதில் அவர் விஜய் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் விஜய்யை கூறுகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.